"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் நாளை 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஒரு நாள் தங்கி முகாமிட்டு கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 21. 02. 2024 அன்று தங்கி முகாமிட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ள அனைத்துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள்.
அன்றைய தினம் மதியம் 2. 30 முதல் 4. 30 வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முன்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டு அறிவார். அதன் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 04. 30 மணி முதல் மாலை 06. 00 மணி வரை பெற்றுக் கொள்வார். என
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்கள்.