உழவர் சந்தை அதிகாரிகள், அதிகாலையில் பணிக்கு வந்து காய்கறிகளுக்கான உரிய சந்தை விலையை நிர்ணயம் செய்ய வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். "உழவர் சந்தை அதிகாரிகள் அதிகாலையில் பணிக்கு வந்ததும், முதல் வேலையாக 'ஜியோடேக்' புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலகம் அனுப்ப வேண்டும். அதிகாரிகள் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை என்ற புகார் வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.