வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிரிசியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் சாமி கும்பிடுவதற்காக கற்பூரம் ஏற்றியபோது அருகில் இருந்த அரச மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்துள்ளது. அப்போது அதிலிருந்த தேனீக்கள் கொட்டியதில் 6 பெண்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.