முதல்வர் மு.க. ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் (92) உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் தயாளு அம்மாள் குணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு நேற்று (மார்ச். 09) மாலை கோபாலபுரம் இல்லம் திரும்பினார்.