கடந்த 40, 50 ஆண்டு காலமாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த திருக்கோவிலுக்கு எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. இந்த அரசு ஆன்மிக அரசாக திகழ்வதற்கு இதெல்லாம் ஒரு ஆதாரம். எப்போதெல்லாம் முகூர்த்த நாள் வருகிறதோ அப்போதெல்லாம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது என தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.