சிரியாவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தினங்களில் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த நாட்டு வரலாற்றில் மோசமான உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக தற்போதைய அரசு ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது கலவரத்துக்கு காரணமாகும்.