கோவில்பட்டி - Kovilpatti

கயத்தாறு: விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்

கயத்தாறு: விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்

கயத்தாறு அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு தலைமைச் செயலகம் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய மாணவ, மாணவிகள் 5 பேர் பழைய மாணவர்கள் சார்பாக தலைமை ஆசிரியர் தலைமையில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  அங்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொழில் பூங்காக்கள், ஐஐடிகள், தலைமைச் செயலகம், புற்றுநோய் மருத்துவமனை உள்பட பல்வேறு முக்கியமான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அதன் விபரங்களை கற்றுத்தெரிந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான முன்னாள் மாணவர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా