பச்சைப் பாலில் ஈ கோலி, சால்மோனெல்லா, லிஸ்டீரியா போன்ற உடலுக்கு கேடு தரும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. பாலை பச்சையாகக் குடிப்பதால் இந்த கிருமிகள், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படலாம். எனவே பாலை நன்றாக காய்ச்சிக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். பாலை குறைந்தது 30 வினாடிகளாவது கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.