பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டையும் ஒன்றாக ஏற்றிச் செல்லும் வகையில் ‘டபுள் டக்கர்’ ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. கீழே சரக்குகளையும், மேலே பயணிகள் அமரும் வகையிலும் இந்த ரயில்கள் உருவாகி வருகிறது. 6 டன் எடையுள்ள சரக்குகளையும், இதன் மேல் பெட்டியில் 46 பயணிகள் அமரும் வண்ணமும் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களால் சரக்குகளையும் விரைவாக கொண்டு செல்ல முடியும். பயணிகளுக்கும் கூடுதல் சேவை கிடைக்கும்.