தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 100 நாள் வேலை கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கொட்டும் மழையில் முற்றுகையிட்டு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கிராமம் கே. வேலாயுதபுரம் கிராமமாகும் இங்கு குமார் 600 க்கு மேற்பட்டோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்த கிராமத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை இதன் காரணமாக முதியவர்கள் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து தங்களுக்கு 100 நாள் வேலை உடனடியாக வழங்க வேண்டும் என கொட்டும் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.