திருக்காட்டுப்பள்ளியில் இடி, மின்னல் தாக்கி பெண் பலி

திருக்காட்டுப்பள்ளியில் இடி, மின்னல் தாக்கி பெண் பலி

திருக்காட்டுப்பள்ளி அருகே வேப்பங்குடியில் வயலில் களையெடுத்த போது, இடி, மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி அருகே சோழகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குடி வடக்குத் தெருவில் வசிப்பவர் விவசாயி ஆறுமுகம் இவரது மனைவி பானுமதி (58). இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயலில் கூலி வேலைக்கு களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மேலும் நான்கு பெண்களும் களையெடுத்தனர்.  இடிமின்னலுடன் பலத்த மழை பெய்த போது, பானுமதி மட்டும் தனியாக வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் பானுமதியை தாக்கியதில், உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அவரை மீட்டு மாரநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதையடுத்து, பூதலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சோழகம்பட்டி கிராமநிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம் பூதலூர் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினார். இது குறித்து, பூதலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு