மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27ஆம் ஆண்டில் 50% சதவீதமாக உயர்த்த வேண்டும். நகர்ப்புற வெள்ளப் பாதிப்புக்கு ரூ.2,500 கோடி, வறட்சி நிவாரணமாக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். பரிந்துரை காலத்தில் செயல்படுத்தும் நிதி அளவுகளில் ஆண்டுகளுக்கு 5% இல் இருந்து 10% ஆக உயர்த்த வேண்டும். கடற்கரை நீளம், நகரமயமாக்கல் வரையறைகளுடன் பேரிடர் குறியீடுகளை மாற்ற வேண்டும் என 16ஆவது நிதிக்குழுவிடம் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது.