திருமேனிஏரி மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டும் பணி தீவிரம்
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே திருமேனிஏரி எனும் கிராமம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் மக்கள் பழுதடைந்த வீடுகளில் வாழ்ந்தனர். புதிய வீடு கட்டித்தர இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது சுமார் 2 கோடியை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 51 வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.