இனி உங்கள் ஆதார் கார்டு நகலை செல்லும் இடங்களுக்கு எடுத்து சொல்லத்தேவையில்லை. தேவைப்படும் இடங்களில் ஆதார் கார்டை காண்பிக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு எளிமையான மாற்றத்தில், உங்கள் முகத்தை மட்டும் காட்டினால் போதும். அதாவது இதெற்கென இருக்கும் செயலியில் QR கோடு மற்றும் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் மட்டும் போதும். உடனே ஆதார் விவரம் சரிபார்க்கப்படும். இது தற்போது சோதனை முறையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.