ஆட்டோ நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். பெண்கள் தன்னம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படுகிறது.