நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப். 09) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. நீட் தொடர்பாக 2022 பிப். 5ல் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. நீட் விலக்கு சட்ட மசோதா கடந்த 2021, 2022-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.