ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய அரிய வாய்ப்பு

71பார்த்தது
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய அரிய வாய்ப்பு
சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகங்களில், பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. வரும் ஏப். 12ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். இதே நடைமுறை அனைத்து மாவட்டங்களிலும் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி