திருநெல்வேலி: வியட்நாமைச் சேர்ந்த நூயென் லீ தய் என்ற பெண்ணை, நெல்லையைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் காதலித்து கரம்பிடித்துள்ளார். வியட்நாமில் வேலை செய்த மகேஷுக்கும், நூயெனுக்கும் இடையே காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன், தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.