அதிமுகவை விமர்சித்து சிபிஎம் மாநில செயலர் சண்முகம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “அமித் ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப ஆடும் பொம்மலாட்டமாக அதிமுக ஆகிவிட்டது. இதை கண்டு, அக்கட்சி தொண்டர்கள் கவலைப்படுவது இபிஎஸ்-க்கு தெரியுமா?. திமுகவுடன் இணைந்துள்ள கட்சிகள் கரைந்துபோகும் என புலம்புகிறார். யாரும் தங்கள் அணியில் சேர வரவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடு அது. பாஜகவின் பாசிச போக்குகளை எதிர்க்கும் தமிழக கட்சிகளின் ஒற்றுமை, இந்த நாட்டுக்கே முன்மாதிரி” என்றார்.