டொமினிக்கன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஜெட் செட் நைட்ட்கிளப்பில், பிரபல மெரென்க் பாடகர் ரப்பி பெரஸ் நேற்று முன்தினம் (ஏப்ரல் 7 கச்சேரி நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 160 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல உயிரிழந்துள்ளனர்.