நன்னிலம் பகுதிகளில் மாலை வரை சுட்டெரிக்கும் வெயில்..

68பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக கோடை கால த்திற்கு நிகராக வெயில் சுட்டெரித்து வருகிறது. கிட்டத்தட்ட நூறு டிகிரிக்கு மேல் வெய்யிலின் தாக்கம் உள்ளது.
இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காலை நேரத்திலேயே தொடங்கும் வெயில் நேரம் செல்ல செல்ல தாக்கம் அதிகரித்து மதிய நேரத்தில் சுட்டெரிக்கும் வெய்யிலாக மாறுகிறது.
இதனால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
மதிய நேரத்தில் வெளியே வந்த மக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள குடை பிடித்தும் தலையில் துணியை போர்த்தியும் செல்கின்றனர். மேலும் வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்கு குளிர்பான கடைகளை நோக்கி செல்கின்றனர்.
மேலும், குளம் வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால். கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு நீர்நிலைகளைத் தேடி அலைகிறது.
நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி மற்றும் குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளிலும் வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் மழையை எதிர்பார்த்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி