மன்னார்குடி - Mannargudi

திருவாரூர்: வடுவூர் கோதண்டராமர் கோவில் கொடியேற்றம் கோலாகலம்

வடுவூர் கோதண்டராமசாமி ஆலயத்தில் ஸ்ரீராமநவமி பெருவிழாகொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் உள்ள கோதண்டராமர் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில்களில் முதன்மையானதாகு உள்ளது. இன்று (ஏப்ரல் 6) காலை சன்னதியில் இருந்து புறப்பட்ட கோதண்ட ராமர் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. கோயிலில் சன்னதியின் முன்பு உள்ள கொடிமரத்தில் கருடன் சின்னம் வரையப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டது.  மங்கள பொருட்களை வைத்து தீட்சிதர்கள் பூஜை செய்தனர். அப்போது கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீட்சிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.  வருகின்ற 9ஆம் தேதி கருடசேவையும், ஏப்ரல் 11ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தேரோட்டமும் நடத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து விடையாற்றி உற்சவம் தொடங்குகிறது.

வீடியோஸ்


திருவாரூர்