மன்னர்குடியில் அதிமுக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் மூவர் கைது
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ரமேஷை என்பவரை அதே வார்டை சேர்ந்த திமுக பிரமுகர் சக்தி உள்ளிட்ட மூன்று பேர் நேற்று இரவு ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சக்தி, சேனாரவி, தர்மதுரை உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.