மன்னார்குடியில் மின் மோட்டாரை சரி செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உப்புகார தெருவை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது 30) தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டில் பழுதடைந்து இருந்த மின்மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஸ்டீபன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி நகர போலீசார் ஸ்டீபன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஸ்டீபன் ராஜுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.