

மன்னார்குடி: மாநாட்டிற்கு நிதி அளித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்
மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.