வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மன்னார்குடி தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த. வெ. க வினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். த. வெ. க இஸ்லாமியர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.