பள்ளிப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் கொள்ளை

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு (60) ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.   கிராமத்திற்கு அருகில் சாலை ஓரத்தில் அவரது விவசாய நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு விவசாயம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ஷியாமளா, தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் மகன் ஜெயசூர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் வெளியூர் சென்றுள்ள நிலையில்  இன்று காலை விஜயலு அவரது மனைவியுடன் உடன் கே. ஜி. கண்டிகையில் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டை பூட்டுக் கொண்டு சென்றுள்ளனர். மாலை 5 மணி அளவில் வீடு திரும்பிச் சென்று பார்த்தபோது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகை மற்றும் ரூபாய் 70 ஆயிரம் உறக்கம் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து விஜயலு பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி