செயின் பறிக்க முயற்சி: தலைமறைவாக இருந்தவர் கைது

74பார்த்தது
மதுரவாயல் அடுத்த வானகரம் அடையாளம்பட்டு  பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 10 வது மாடியில் வசித்து வருபவர் மணீஷ் ராணி இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளரின் மனைவியாவார். நேற்று முந்தினம் மாலை தனது வீட்டின் காலிங் பெல் அடிப்பது அறிந்து வெளியே வந்து பார்த்தார். ஆனால் ஆட்கள் யாரும் இல்லாததால் மீண்டும் உள்ளே சென்று விட்டார். பின்னர் மீண்டும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த பெண்ணிடம் உதவி கேட்பது போல் நடித்து திடீரென பெண்மணியின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.   உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் கதவை மூடிவிடவே கதவை இழுத்து திறந்து பெண்ணைத் தாக்கி அத்துமீறி செயினை பறிக்க முயன்றார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சர்வ சாதாரணமாக தப்பிச் சென்றார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சச்சின் (எ) சதீஷ் என்ற வாலிபரை போலீசார் பிடிக்க சென்றனர் அப்போது அவர் தப்ப முயன்று கீழே விழுந்ததில் வலது கை முறிந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இவர் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட 10கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி