நடிகர் ரவிக்குமார் மறைவிற்கு நடிகை ராதிகா சரத்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில், "நடிகர் ரவிக்குமார் மறைவு கேட்டு வருத்தமடைந்தேன். அவருடன் ராதன் புரோடக்ஷனில் பல படங்களில் மறக்க முடியாத வேடங்களில் பணியாற்றினேன். அவரது சிரிப்பும் ஆழமான குரலும் எப்போதும் நம் இதயங்களில் பதிந்திருக்கும். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.