கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

67பார்த்தது
கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
மோகன்லாலின் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான இப்படத்தில் குஜராத் கலவரம், முல்லைப் பெரியாறு விவகாரங்கள் குறித்து கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே கோகுலம் கோபாலன் வீட்டில் சோதனை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி