ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால்தான் நேரலையில் வருவதில்லை என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, "கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.