கர்நாடக மாநிலத்தில் விடுமுறை மறுக்கப்பட்டதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் பாலசந்திர ஹுக்கோஜி என்பவர் தனது சகோதரியின் மகள் திருமணத்திற்காக விடுமுறை கேட்டுள்ளார். ஆனால், நிர்வாகம் விடுமுறை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஓட்டுநர் பாலசந்திர ஹுக்கோஜி, தான் ஓட்டும் பேருந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.