நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி சீரியலில் அவரது அப்பா ஈஸ்வரபாண்டியனாக நடித்து பிரபலமடைந்தவர் ரவிக்குமார். மேலும், ராதிகாவின் வாணி ராணி சீரியலிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், ரவிக்குமாரின் இழப்பை ராதிகா எப்படித் தான் தாங்கிக்கொள்ளப் போகிறாரோ என்று ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே தன் குருவான பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் இறந்த சோகத்தில் இருந்தே ராதிகா இன்னும் மீண்டு வராத நிலையில், ரவிக்குமாரின் மறைவு அவருக்கு பேரிடியாக விழுந்துள்ளது.