திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என்று தனியாக மருந்து மாத்திரை இல்லை என்றும் அப்படி மருந்து மாத்திரை வேண்டும் என்றால் டாக்டர்கள் எழுதி தரும் மருந்தை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதாக குற்றம் சாட்டிய இஸ்லாமிய பெண்கள். மருந்து வாங்க காசு இல்லை என்பதற்காகத்தான் நாங்கள் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம் எங்களை மருந்து கடையில் மருந்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவது எப்படி சரியாகும். என்றும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடுகள் உள்ளதாக கூறும் பொதுமக்கள். இந்த பகுதியில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களோ மருந்துகளோ இல்லை என்றும். ஐந்து மருத்துவர் பணி செய்ய வேண்டிய இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் தான் பணி செய்கின்றனர் என்றும் கூறுகின்றனர். மீதமுள்ள மருத்துவர்கள் மேற்படிப்பிற்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதிலும் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என்றும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர சிகிச்சை வேண்டுமென்றால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இது போன்ற பல குற்றச்சாட்டுகளை தேர்தல் முடிந்து தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வாங்கி திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சசிகாந்த் செந்தில் இடத்தில் பொதுமக்கள் கூறிய புகார் தான் இவை.