திருவள்ளூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் கிராமத்தில் நிஜநாதன் என்பவருக்கு சொந்தமான
இரண்டு பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கே மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மின்சாரத்துறையினர் மின் இணைப்பு துண்டித்து பின்னர் உயிரிழந்த மாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு பசுமாடுகள் உயிரிழந்ததால் மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.