திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்
மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்துகொண்டு பேசுகையில்
சமூக வலைதளங்களில்
இன்ஸ்டா ரீல்ஸ்
மூன்று நிமிட வீடியோக்களை சீமான் ஸ்டாலின் விஜய்க்கு பதிவிடுவதைப் போன்று அதிமுக ஐடி விங் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே பதிவிட்டு மக்களிடம் அனைத்து தலைவர்களை விட சிறந்தவரான எடப்பாடி பழனிசாமியின் புகழை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அதிமுகவில்
2 கோடியே 6 லட்சம் பேர்உறுப்பினர்களை இணைத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வரும் நிலையில் தொகுதிக்கு 15 ஆயிரம் பேர் போலியாக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் ஆன்லைனில் உறுப்பினர் பதிவு செய்த போது திமுகவினர்
தங்களை உறுப்பினராக போலியாக பதிவு செய்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் போலியானவர்களை கண்டறிந்து உரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை சென்று சேர்க்க வேண்டும் எனவும்
வாக்காளர் பட்டியலை பார்த்து உறுப்பினர்களை சேர்த்துள்ளதை கிராமங்களில் உள்ள கிளை வாரியாக சோதனை நடத்தி வருவதாக அவர் தெரிவித்ததால் அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.