மீன்பிடி வலைகள் எரிந்தை மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆய்வு.

75பார்த்தது
மீன்பிடி வலைகள் எரிந்தை மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மீன்பிடித்து விட்டு கரையில் வைத்திருந்த மீன் பிடி வலைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர், மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று சென்னை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மீனவப் பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கதறி அழுத்தனர். கடந்த சில மாதங்களாக பழவேற்காடு பகுதியில் மீன்பிடி வலைகள் எரிக்கப்படுவது குறித்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி எரிந்து சாம்பலான வலைகளையும் மீட்கப்பட்ட வலைகளையும் பார்வையிட்டனர். ஆய்வுக்கு பின்னர் அரங்கம் குப்பம் மீனவ கிராம மக்களுக்கு ஆறுதல் கூறி இதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி