சென்னையில் வரும் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், தற்போது மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்றும் என்ற கிரிகையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.