முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின்: புறப்பட்டார்

61பார்த்தது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் இருந்துஜாமீனில் வெளியே வந்தார்.
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்ட அவருக்கு 58 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு 471 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த செந்தில் பாலாஜியை உச்சநீதி மன்றம் 6 நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலைசெய்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு உறவினர்கள் 25 லட்சம் ரூபாய் பினைத்தொகையை நீதி மன்றத்தில் செலுத்தியதுடன் செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்தனர். இதனைஏற்று செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதி கார்த்திகேயன் ஜாமீனில் விட உத்தவிட்டுள்ளார்.
நீதி மன்றம் அந்த ஆணை நகலை ஈமெயில் மூலம் அனுப்பியதாகவும் அதனை ஈமெயில் மூலம் சிறை த்துறையினருக்கு கிடைக்கபெற்றதும் செந்தில் பாலாஜியை ஜாமீனில் சிறை அதிகாரிகள் ஜாமீனில் விடுதலை செய்தனர். சிறையில் இருந்து சோர்வுடன் வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சிறை வளாகம் முன்பு திமுகவினர் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். இதனால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி