மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் கழக தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு அமைச்சர் மாவட்ட செயலாளர் திரு. பிகே. சேகர் பாபு அவர்களின் ஆலோசனைபடி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 86வது வார்டு மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 5 வகுப்பறைகளுடன் ஒப்பனையரை கூடிய புதிய கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜையில் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
உடன் மண்டல குழு தலைவர் பி. கே. மூர்த்தி, 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். கமல், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.