சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, தனது ஸ்மார்ட்போன்களில் தற்போது வரை மீடியாடெக் மற்றும் குவால்காம் சிப்செட்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் சொந்த சிப்செட்டை தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2025-ல் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதற்காக தனது சொந்த சிப்செட்டை வேகமாக உருவாக்குகிறது. இதன்மூலம் மீடியாடெக் மற்றும் குவால்காம் சிப்செட் பயன்பாட்டை குறைக்கவுள்ளது.