போடியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (21-2-2024) ஒபிஎஸ் -ன் போடி முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 - வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது. போடி நகர் செயலாளர் வி. ஆர் பழனிராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.