திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

தஞ்சை: சுவாமிநாத சுவாமி ஆதீனம் பேட்டி

சூரியனார்கோவில் ஆதீனம் 28வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள், பெங்களூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ காரியமாக நியமிக்கப்பட்டுள்ள சுவாமிநாத சுவாமிகள் நிரூபர்களிடம் கூறியதாவது: ஆதீனத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காக இதனை தெரிவிக்கின்றேன். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண்ணை, ஆதீனம் 28வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்து கொண்டதாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப் பெண் குறித்து விசாரித்த வகையில் பல குற்ற பின்னணி கொண்டவர். அவருக்கு அதிகளவில் சொத்துக்கள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது. சுமார் 1, 500கோடி சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்க அவர் திட்டம் தீட்டி, இந்த பதிவு திருமணத்தை செய்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல. இது ஆதீன சம்பிரதாயத்திற்கு எதிரானது. எனவே சூரியனார் கோவில் ஆதீனத்தின் மாண்பு போற்றி பாதுகாக்கும் வகையில் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்கள் இதில்தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். பெங்களூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ மீது இருக்கக்கூடியகுற்றச்சாட்டுகளை முழுமையாக சேகரித்து திருவிடைமருதுார் டி. எஸ். பி. , யிடம் புகாராக அளிக்க உள்ளோம் என்று கூறினார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా