திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து

80பார்த்தது
தமிழகத்தில் மது, போதைப் பொருள் பயன்பாடுகளின் தீவிரமும் ரவுடிகளின் அட்டகாசமும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள, தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும்
என்பதைச் சொல்லுகின்றன.

கஞ்சா போதைப் பொருள் விஷயத்தில்
காக்கிச் சட்டை பொம்மைகளாகவும்
கோட்டை விட்ட பதுமைகளாகவும்
தமிழ்நாடு காவல்துறை மாறிவிட்டது திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து.

கும்பகோணம் தாலுக்கா, நாச்சியார் கோவில் அருகே, ஏனநல்லூர், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில்
24. 04. 2024 புதன்கிழமை காலை, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் தரிசனம் செய்தார்கள்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாத நாயனார் அவதாரத்தலம் ஏனநல்லூர் ஆகும்.
இவர் மன்னர்களுக்கும் வீரர்களுக்கும் போர் பயிற்சி மற்றும் தற்காப்பு கலையான, களரி, வாள் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி,
அருள் தரும் கற்பகாம்பாள் மற்றும் அருட்திரு. ஏனாதிநாத நாயனாருக்கு நடத்தப்பட்ட அபிஷேக, ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்ட பின், சுவாமிகள் தெரிவித்ததாவது;

நாம் காணும் சமூக சுய கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்றவை சான்றோர்கள், நாயன்மார்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை.

தொடர்புடைய செய்தி