தாய்மையின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் விதமாகவும், தன்னலமற்ற தாயின் அன்பை போற்றும் விதமாகவும் வருடந்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை “உலக அன்னையர் தினம்” உலகமெங்கிலும் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக உயிர்கள் அனைத்திற்கும் தாய்மையே பிரதானம். தாய் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் எந்த ஜீவராசிகளும் பிறக்க முடியாது. எத்தனை வறுமை நிலை இருந்தாலும், தான் பட்டினி கிடந்து குழந்தைகளுக்கு பசியாற்றும் செயலை தாயால் மட்டுமே செய்ய முடியும். அத்தகைய தியாகத்தின் திருவுருவான தாயைப் போற்றுவோம், தாய்மைக்கு தலை வணங்குவோம்.