நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்

54பார்த்தது
நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் நாளை (மே 13) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து இந்த கப்பல் இன்று (மே 12) மதியம் நாகை வந்தடைய உள்ளது. சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி