இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் - அமெரிக்கா அறிக்கை

50பார்த்தது
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் - அமெரிக்கா அறிக்கை
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் உலக நிகழ்வுகள் குறித்தும் அறிக்கையை வெளியிடும். அதன்படி இந்தியாவில் நடந்த சில சம்பவங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மணிப்பூர் கலவரம், ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டது, ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவது ஆகியவை இடம்பெற்றுள்ளன. 'மனித உரிமைகள் நடைமுறை 2023: இந்தியா' என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே நடந்த இன மோதல்களில் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you