எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு

78பார்த்தது
எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு
போதிய மழை இல்லாமல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல்லில் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது. வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும் 2 மாதங்களுக்கு விலை குறையாது என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையான எலுமிச்சம்பழம், தற்போது 160 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி