தஞ்சாவூர் மூலை அனுமார்கோயில் ஐயப்பன் சன்னதியில் சாஸ்தா ஹோமம்

75பார்த்தது
தஞ்சாவூர் மூலை அனுமார்கோயில் ஐயப்பன் சன்னதியில் சாஸ்தா ஹோமம்
தஞ்சாவூர் மூலை அனுமார் கோயில் ஐயப்பன் சன்னதியில் சாஸ்திர ஹோமம் நடந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோயிலில் நேற்று ஐயப்பன் சன்னதியில் காலை மகா கணபதி ஹோமம், சாஸ்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்தலத்தில் தற்போது சபரிமலையில் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஐம்பொன் ஐயப்பன் விக்ரகம் சுவாமிமலையில் இருந்து எடுத்து செல்லும்போது மூலை அனுமார் கோயிலில் வைத்து அபிஷேகம் செய்து எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி