தமிழகத்தில் இந்த டிசம்பரில் 'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (டிச. 21) வரை மழைக்கு 17 பெண்கள், 14 குழந்தைகள், 30 ஆண்கள் என மொத்தம் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில், 19; திருவண்ணாமலை 14; கடலூரில் 9 பேர் இறந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியது, மின்சாரம் தாக்கி இறந்தது இதில் அடக்கம்.